திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்;
அடிகள்; அன்று,
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள்
செம்மை
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும்
சோலைத்
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

பொருள்

குரலிசை
காணொளி