பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை
என்னும்
நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி,
கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர்
போலும்
செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.