திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரி
சடையர்
பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு
அரவர்;
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல்
செய்வார்
செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

பொருள்

குரலிசை
காணொளி