ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள
அரவும்,
கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல்
உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள்
தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை
செல்வர் தாமே.