திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர்,
என்னும்
அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம்
அண்ணலார் தாம்
கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல,
திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி