பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர்,
பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர்
தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன்
சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.