திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

“என்றும் ஓர் இயல்பினர்” என நினைவு அரியவர்; ஏறு
அது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும்
இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது
அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

பொருள்

குரலிசை
காணொளி