திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும்
காணாது
“அங்கணா! அருள்!” என அவர் அவர் முறைமுறை
இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

பொருள்

குரலிசை
காணொளி