திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

ஒவ்வாத என்பே இழையா, ஒளி மௌலிச்
செவ்வான் மதி வைத்தவர் சேர்வு இடம் என்பர்
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம்போது
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி