பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்; சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி; பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண் புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.