பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ, நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச; மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும் பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.