பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும் மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில் நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச் செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.