பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும் சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்; தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.