திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, “சிக்கெனத் தவிரும்!” என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.

பொருள்

குரலிசை
காணொளி