பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே “சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்!” என்று, மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க, அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே.