திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

“வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று” என்று,
“செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்!” என்ன,
“நம்பினார்” என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி,
அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.

பொருள்

குரலிசை
காணொளி