திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை,
பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை,
உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே.

பொருள்

குரலிசை
காணொளி