திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை,
வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை,
பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை,
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.

பொருள்

குரலிசை
காணொளி