பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள் முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை, மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே.