பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச் சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.