பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும் கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே- பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம் சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!