மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி
மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய
புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல
சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?