செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும்,
மற்றைப்
பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய
புண்ணியனே!
எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது
என்கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?