கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக்
கன்னிமார்கள்,
பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய
புண்ணியனே!
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது
என் கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில்
விரும்பியதே?