சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத
வாய்மைப்
புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய
புண்ணியனே!
எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது
என்கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?