திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி
மங்கையோடும்
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல்
சொல்லாய்
மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?

பொருள்

குரலிசை
காணொளி