திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப்
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய
புண்ணியனே!
இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது
என் கொல் சொல்லாய்
மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?

பொருள்

குரலிசை
காணொளி