இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற
விரல் ஒற்றி, ஐந்து
புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய
புண்ணியனே!
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது
என்கொல் சொல்லாய்
விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?