திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து,
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல்
சொல்லாய்
வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில்
விரும்பியதே?

பொருள்

குரலிசை
காணொளி