திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

குரும்பை முலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு, குறிப்பினொடும் சென்று, அவள் தன் குணத்தினை நன்கு அறிந்து,
விரும்பு வரம் கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர்கோன்; கண் நுதலோன்; மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம் பண் பாட, அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில்
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும், கழனிக் கமலங்கள் முகம் மலரும், கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி