திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

இலங்கையர் கோன் சிரம்பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி,
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி, நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில்
பலங்கள் பல திரை உந்தி, பரு மணி பொன் கொழித்து, பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருங்கி,
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல், கயல் உகளும் வயல் புடை சூழ், கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி