திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

நிற்பானும், கமலத்தில் இருப்பானும், முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப, நினைந்தருளி, அவர்க்கு ஆய்
வெற்பு ஆர் வில், அரவு நாண், எரி அம்பால், விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்
சொல்பால பொருள் பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து, இறை தன் திறத்தே
கற்பாரும் கேட்பாரும் ஆய், எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி