திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்விப் பெருந் தேவர் சிரம் தோள் பல் கரம் கண் பீடு அழியச்
செற்று, மதிக்கலை சிதையத் திருவிரலால்-தேய்வித்து, அருள் பெருகு சிவபெருமான் சேர் தரும் ஊர் வினவில்
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் சேர் அரிசிலின் தென் கரை மேல்,
கற்றினம் நல் கரும்பின் முளை கறி கற்க, கறவை கமழ் கழுநீர் கவர் கழனி, கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி