தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில்-தடம் கொள் பெருங் கோயில்தனில்,-தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன் நாள் வழிபாடு செய்ய, மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்,
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு, கலய நல்லூர் காணே .