திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்,
கரும்புவிலின் மலர் வாளிக் காமன் உடல் வேவக் கனல் விழித்த கண் நுதலோன், கருதும் ஊர் வினவில்
இரும் புனல் வெண் திரை பெருகி, ஏலம், இலவங்கம், இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல்,
கரும் பு(ன்)னை வெண் முத்து அரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின் காட்டும் கடி பொழில் சூழ், கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி