திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கராகம்

செரு மேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி,
இருள் மேவும் அந்தகன் மேல்-திரிசூலம் பாய்ச்சி, இந்திரனைத் தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்
பெரு மேதை மறை ஒலியும், பேரி-முழவு ஒலியும், பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும், பெருக;
கருமேதி புனல் மண்ட; கயல் மண்ட, கமலம்; களி வண்டின் கணம் இரியும் கலய நல்லூர் காணே .

பொருள்

குரலிசை
காணொளி