மால் அயனும் காண்பு அரிய மால் எரி ஆய் நிமிர்ந்தோன், வன்னி மதி சென்னிமிசை வைத்தவன், மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன், விடை ஊரும் விமலன், உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ, கோல மயில் ஆல, சுரும்பொடு வண்டு இசை முரல, பசுங்கிளி சொல்-துதிக்க,
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலய நல்லூர் காணே .