பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டு ஏர் ஆற்று அலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழுங்கமலம்.