திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை
பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை
மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல்
வேதிகுடியே.

பொருள்

குரலிசை
காணொளி