திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும்
மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும்
நகர்தான்-
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு
இசை குலா,
மிக்கு அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு,
வேதிகுடியே.

பொருள்

குரலிசை
காணொளி