வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு
இலாதவர் மொழி
தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம்
ஆம்
அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு
இசைக் கிளவியால்,
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு
வேதிகுடியே.