செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான்
உரிவை போர்த்து
“ஐயம் இடும்!” என்று மடமங்கையொடு அகம் திரியும்
அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத
வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர்,
வேதிகுடியே.