உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க
அருள
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன்
இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம்
மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி
வேதிகுடியே.