திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும்
நேட, எரி ஆய்,
“தேவும் இவர் அல்லர், இனி யாவர்?” என, நின்று
திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர்
பயில்வு ஆம்,
மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ்
வேதிகுடியே.

பொருள்

குரலிசை
காணொளி