காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல்
செய்யர், செவியில்-
தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை
நகர்தான்-
பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு
பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு
வேதிகுடியே.