உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன்
முடிதோள
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள்
அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த
கலவை
விரைக் குழல் மிகக் கமழ், விண் இசை உலாவு திரு
வேதிகுடியே.