பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில், விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.