பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி, ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி, வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.