பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு, மொய் சடைகள் தாழ, வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி, புளை கயப் போர்வை போர்த்து, புனலொடு மதியம் சூடி, வளை பயில் இளையர் ஏத்தும் வலம் புரத்து அடிகள் தாமே.