திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எண் இல் இதயம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரை சிரமிக்க சிகை ஆதி
வண்ணக் கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரியை பர நேத்திரத்திலே.

பொருள்

குரலிசை
காணொளி